இன்று முதல் “MONEY HEIST SEASON 5”.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

இன்று முதல் “MONEY HEIST SEASON 5”.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Default Image

இன்று  “MONEY HEIST SEASON 5” வெளியானது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். 

சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த வெப் சீரிஸ்களில் ஒன்று “மணி ஹெய்ஸ்ட்”. இதுவரை 4 சீசன் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. வங்கி திருட்டை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட இதில் மிரட்டலான பல காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது எனவே கூறலாம்.

இந்த தொடரை காண்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள Verve logic என்ற தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருந்தது.  கடைசியாக  மணி ஹெய்ஸ்டின் முன்னணி கதாபாத்திரமான புரபசர் கைதாவதாக 4ஆம் பாகம் முடிவடைந்த நிலையில் அடுத்த பாகம் வெளியாகியுள்ளது.

மணி ஹெய்ஸ்டின் 5-வது பாகம் தலா 5 அத்தியாயங்கள் என இரண்டு பகுதிகளாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டு முதல் பகுதி இன்று மதியம் 12.30 மணிக்கு நெட்ஃபிக்ஸில் வெளியானது.இதனை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். மணி ஹெய்ஸ்டின் 5ஆம் பாகத்தின் 2-ம் பகுதி டிசம்பர் 3 தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube