டிக்டாக் மூலம் ரூ.5 கோடி நிதி திரட்டிய பிரபல நடிகை!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக டிக்டாக் மூலம் ரூ.5 கோடி நிதி திரட்டிய நடிகை ஊர்வசி.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மக்கள் வெளியே வேலைக்கு செல்ல இயலாமல் தவித்து வருகிற நிலையில், ஒரு வேலை உணவிற்கு கூட வழியில்லாமல் பலர் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா டிக்டாக்கில் ஜூம்பா, உடற்பயிற்சி வகுப்புகளை இலவசமாக கற்றுக்கொடுத்து அதன் மூலமாக 5 கோடி ரூபாய் திரட்டியுள்ளார்.

இந்த பணத்தினை கொரோனா ஊரடங்கினால், வருமானமின்றி தவித்து வரும் மக்களுக்காக கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த உதவியும் சின்ன உதவியில்லை. உதவி செய்யும் ஒவ்வொரு ரூபாயும், மனித உழைப்பும் முக்கியமானது என தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.