காதலிக்கு அதிர்ச்சியான திருமண பரிசு கொடுத்த முன்னாள் காதலன் …!

சத்தீஸ்கர் மாநிலம் பாலேட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை கரிகாலன் எனும் இளைஞர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்து போன இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதற்கு முன்பதாக அவர் சுவற்றில் சிறிய கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் என் மரணம் தான் உன் திருமண பரிசு, ஐ லவ் யூ இப்படிக்கு கரிகாலன் என எழுதியுள்ளார். மேலும் தான் தூக்கிட்டு கொள்வதையும் வீடியோவாக எடுத்து அந்த வீடியோவை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அவர் பதிவிட்டு விட்டு அதன் பின்பதாக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் காதலியின் திருமணம் குறித்த செய்தி அறிந்து மனமுடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal