ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற்றாலும் இதனை கடைபிடியுங்கள் – நடிகர் ஹிருத்திக் ரோஷன்

ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற்றாலும் இதனை கடைபிடியுங்கள் – நடிகர் ஹிருத்திக் ரோஷன்

Default Image

இந்தியா முழுவதும் கொரோனா  பரவுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதானால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி உள்ளது. 

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் இதுகுறித்து கூறுகையில், ‘ ஊரடங்கு முடிந்த 22-வது நாள் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். ஊரடங்கின் முடிவை வெற்றியாக அர்த்தம் கொள்ளக்கூடாது. கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும்வரை, நாம் சமூக விலகலை தொடர வேண்டும். இதற்கு பல மாதங்கள் வரை ஆகலாம். தயவு செய்து இதனை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.’ என  கூறியுள்ளார்.

Join our channel google news Youtube