சத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த செம்பருத்தி கதிர்.! வருங்கால மனைவியுடனான அழகிய புகைப்படம் இதோ.!

சத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த செம்பருத்தி கதிர்.! வருங்கால மனைவியுடனான அழகிய புகைப்படம் இதோ.!

Default Image

செம்பருத்தி சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் கதிர் தனது நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளார்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி. அதில் அனைவரையும் தனது குறும்பு பேச்சால் சிரிக்க வைப்பவர் விஜே கதிர். செம்பருத்தி சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்ற இவர் விஜே ஆக இருந்து, நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது விடா முயற்சியால் சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக தனது நிச்சயதார்த்தத்தை நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைப்பெற்றுள்ளது. தனது வருங்கால மனைவியுடனான நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்த இவர், இந்த நாள் தனக்கு மிகப் பெரிய நாள், தனது வாழ்க்கையின் மறக்க முடியாத நாளில் என்னை மிகவும் நேசிக்கும் அனைவரையும் அழைக்க இயலாததற்காக மன்னிப்பை கேட்டு கொள்கிறேன். ஏனெனில் லாக்டவுன் மற்றும் இ-பாஸ் தான் சிரமத்திற்கு காரணம். மேலும் தனது திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பதாகவும், அனைவரும் கலந்து கொண்டு ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது பிரபலங்கள் பலர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube