அதை நம்பி வந்து ஏமாந்துடாதீங்க – மோகன் ஜி.!

ரூத்ர தாண்டவம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை தர்ஷா குப்தா பற்றி இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ரூத்ர தாண்டவம்‘. இந்த படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தர்ஷா கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கடத்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

RudraThandavamPressMeet 4

அதில் பேசிய இயக்குனர் மோகன் ஜி கூறியதாவது” தர்ஷா குப்தாவிற்கு சம்பள பாக்கி பெட்டிங்கில் வைத்துள்ளேன்..பாடல் வெளியாவதற்குள் கொடுத்துவிடுவேன்.. இந்த படத்திற்காக அவரே டப்பிங் பேசியுள்ளார்.. நான் செய்த மூன்று படங்களிலும் கதாநாயகிகள் அவரது குரலிலே டப்பிங் பேசியுள்ளனர் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி..

நீங்கள் பார்த் தர்ஷா குப்தா படத்தில் இருக்க மாட்டாங்க…அதை நம்பி வந்த ஏமாந்து டாதீங்க.. படத்தில் 8 மாத கர்ப்பிணி பெண்ணாக அறிமுகமாவார்.. ஒரு குழந்தைக்கு அம்மாவாக படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் அதை பார்த்திருப்பீர்கள்..எப்படி இப்படி நடிச்சீங்கன்னு எல்லாரும் கேப்பாங்க.” என தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.