எனது தொலைபேசி எண்ணைத் துண்டிக்கப் போகிறேன்..! எலான் மஸ்க் அறிவிப்பு

எனது தொலைபேசி எண்ணைத் துண்டிக்கப் போகிறேன்..! எலான் மஸ்க் அறிவிப்பு

இன்னும் சில மாதங்களில் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டிக்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் அண்மையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

எக்ஸ் தளத்தின் உரிமையாளராகவும் எலான் மஸ்க் உள்ளார். இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்னும் சில மாதங்களில் என்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டு, எக்ஸ் தளத்தை குறுஞ்செய்தி மற்றும் ஆடியோ, வீடியோ அழைப்புகளுக்கு பயன்படுத்தவிருக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை! மோசடி நடப்பதாக இம்ரான் கான் கட்சியினர் போராட்டம்

அவரின் இந்த அறிவிப்பு எக்ஸ் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் தளம் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புக்கான ஆரம்ப பதிப்பை கடந்தாண்டு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube