Eliminator LSG vs MI: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs MI எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு.

16வது ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டியில் இன்றைய வெளியேற்று சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. ஐபிஎல் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த லக்னோ மற்றும் மும்பை அணிகள் வெளியேற்று எனப்படும் எலிமினேட்டர் போட்டியில் இன்று களம் காணுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறும், ஆனால் அதே சமயத்தில் தோல்வியுறும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும். கடந்த வருடம் அறிமுகமான லக்னோ அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

கடந்த ஆண்டு எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் வெளியேறிய லக்னோ அணி இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது, அதேநேரம் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியும் மோதுவதால் இன்றைய போட்டி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்):

ரோஹித் சர்மா(C), இஷான் கிஷன்(W), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், ரித்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்):

ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, பிரேரக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன்(W), க்ருனால் பாண்டியா(C), கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், மொஹ்சின் கான்

author avatar
Muthu Kumar