யானையை கொன்றவர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு!

யானையை கொன்றவர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு.

கேரள மாநிலத்தில், கர்ப்பமான காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்ததால், அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். இதனையடுத்து, இது யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதனை உட்கொண்ட யானை, ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. மனிதாபிமானமற்ற முறையில், யானையை கொன்ற காட்டுமிராண்டிகளுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்கள் குறித்து துப்பு கொடுத்தால், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளது.