தொடங்கியது UPSC தேர்வு…தகவல் பலகை கூட தமிழில் இல்லை என குற்றச்சாட்டு.!

upsc 2023 exam

இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தொடங்கியது.

IPS, IAS உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்கானவர்களை தேர்வு செய்யும் UPSC தேர்வுகள் இன்று நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய 5 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.

இதற்காக பல நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இந்த முதன்மைத் தேர்வு இரு கட்டங்களாக நடைபெறுகிறது. GS1 காலை 9.30 முதல் 11.30 வரையிலும், CSAT மதியம் 2.30 முதல் 4.30 வரையிலும் நடைபெறவுள்ளது.

தற்பொழுது, GS1 தேர்வை முடித்துவிட்டு வெளியே வந்த தேர்வர்கள் தகவல் பலகை கூட தமிழில் இல்லை என்று UPSC தேர்வர்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர். இரண்டாம் கட்ட தேர்வு இன்று பிற்பகல் 2.30 தொடங்க இருக்கிறது. தேர்வர்கள் 10 நிமிடங்களுக்கு முன் தேர்வறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்