பள்ளிகள் திறப்பு: கோடை விடுமுறை முடிந்து வீடு திரும்பும் மாணவர்களுக்கு நாளை தான் கடைசி நாள்.!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12 திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஏற்கனவே 2 முறை பள்ளிகள் திறப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக வரும் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்று மீண்டும் வீடு திரும்ப உள்ள பள்ளி மாணவர்களுக்கு 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (ஜூன் 9), இன்று (ஜூன் 10), நாளை மறுநாள் (ஜூன் 11) என வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சுமார் 650 பேருந்துகளும், சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்டட் முக்கிய நகரங்களுக்கு சுமார் 850 பேருந்துகளும் என மொத்தமாக 1500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதுபோன்று ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.