மாணவர்கள் கவனத்திற்கு.! பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில், மாணவர்கள் http://tneaonline.org , http://tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே, ஆக.2ம் தேதி பொறியியல் கலந்தாய்வு என அறிவித்திருந்த நிலையில், ஒரு மாதம் முன்கூட்டியே இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 3-ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குகிறது.