JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள்… விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.!
IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியவில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொழிற்கல்வி பல்கலைக்கழகமான இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (IIT) முதுகலை பட்டங்கள், பிஎச்.டி பட்ட படிப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நடத்தப்படும் JAM 2024(Joint Admission Test) மோளம் சேர்க்கையை ஐஐடி சென்னை (IIT Madras) பல்கலைகழகம் நடத்தும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஏப்ரல் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் jam.iitm.ac.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் சுயவிவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
புகைப்படம், கையெழுத்து, 10, 12 மற்றும் மற்ற கல்வி சான்றிதழ்கள், மத்திய அரசு சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கொன்று JAM 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சேர்க்கையானது, மாணவர்கள் கல்லூரிகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், மாணவர்களின் விருப்ப கல்லூரியில் உள்ள இடங்கள் பொருத்தும் சேர்ககப்படுவர்.
இதற்கான விண்ணப்ப கட்டணம் 750 ரூபாய் ஆகும். நாடு முழுவதும் உள்ள 21 ஐஐடி பல்கலைக்கழகங்களில், உள்ள 89 பாடப்பிரிவுகளில் உள்ள 3000 மாணவர் சேர்க்கை இடங்களுக்கு இந்த சேர்க்கை நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் OBC உள்ளிட்ட பொது பிரிவினருக்கு 15000 ரூபாய் கல்வி கட்டணமாகவும், SC/ST/PWD பிரிவினர்களுக்கு 7500 ரூபாய் கல்வி கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மே 31ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும், ஜூன் 4ஆம் தேதிக்குள் கல்வி கட்டங்களை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.