பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளித்த அதிசய நாடு!
பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி அமெரிக்காவில் வைத்துக்கொள்ள ஆதரவளிப்பதாக கூறியுள்ள வெள்ளை மாளிகை, துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தும் கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது.
ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மெஜாரிட்டி ஸ்டோன்மேன் என்ற பள்ளியில் முன்னாள் மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், 14 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மாணவர்களையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர்கள் கைத்துப்பாக்கிகள் வைத்துக் கொள்ளலாம் என கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், துப்பாக்கிகள் வாங்குவதற்கான வயதையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். அவரது இந்த கருத்துக்கு குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆசிரியர்கள் துப்பாக்கிகள் வைத்துக் கொள்வதற்கான சட்டத்தை புளோரிடா மாகாண அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் துப்பாக்கி வாங்குவதற்கான வயதையும் 18ல் இருந்து 21ஆக உயர்த்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.