கால்நடை மருத்துவம் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்.!

Veterinary Science

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து ஜூன் 12ம் தேதி முதல் 30ம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

மொத்தமாக பெறப்பட்ட 22535 விண்ணப்பங்களுள், அதில், 18752 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கும் பெறப்பட்டன. தற்போது, 2023-24ஆம் கல்வியாண்டிற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் தரவரிசைப் பட்டியலின் விவரங்களை edm.tanuvas.ac.in மற்றும் tanuvas.ac.in என்ற இணையதளங்களின் வாயிலாக தெரிந்து கொள்ளாலாம். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர் ராகுல் காந்த் எம். தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த கனிமொழி வி, தென்காசி மாவட்டத்தை சார்ந்த முத்துலட்சுமி எஸ், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த நந்தினி கே, திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த கிரேஸ் கிரிஷ்டி எ. தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த விஷ்வா 4, அரியலூர் மாவட்டத்தை சார்ந்த வசந்தி வி, நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த லோபாஷினி எம், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த சக்தி குமரன் எஸ் மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த கவுசிகா எஸ் ஆகிய 10 மாணவ மற்றும் மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் இடங்களை பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்