மத்திய அமைச்சரவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 24 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க சுமார் 14 ஆயிரத்து 930 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டமாக மருத்துவ வசதியில்லாத பகுதிகளில் 24 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு கூடுதலாக 10 ஆயிரம் இளநிலைப் […]
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும், பாதிக்கப்படும் மாணவர் குடும்பத்திற்கு 48 மணி நேரத்தில் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், விபத்தில் மாணவர் உயிரிழந்தால் 1 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தால் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் […]
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். லஞ்சப்புகாரில் கைதான துணை வேந்தர் கணபதியின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிநியமனங்கள் குறித்த ஆவணங்களை அப்போது சேகரித்ததாக கூறப்படுகிறது. பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் வனிதாவின் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் 3 அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது பதிவாளர் அலுவலகத்திலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. […]
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூரில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். நகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவில், 269 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான பணிகள் அண்மையில் தொடங்கின. பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், அடுத்த ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த திமுக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதை வரவேற்பதாக கூறியுள்ளார். உலகில் உள்ள அனைத்து மிகப்பெரிய பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பது எட்டிவிடும் தூரம்தான் என தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலை கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைவது தமிழகத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளில் வசிக்கும் தமிழ்ப்பெருமக்கள் அனைவருக்கும் தேனான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் மற்றுமொரு பங்களிப்பாக, ஹார்வார்டு தமிழ் இருக்கை அமைவதற்கு 1 […]
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம் என்கிற பொருள்படும்படி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சி செய்ய உள்ளதாக கூறினார். ஒருவேலை நீட் […]
தனியார் கல்லூரி பேருந்து திருப்பூரில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து. 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் காயமடைந்தனர். திருப்பூர் முத்தூர் பகுதியில் கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கல்லூரி பேருந்து மாணவர்களுடன் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த போது கூலிப்பாளையம் அருகே பேருந்து ஓட்டுநர் -க்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் காயம் அடைந்தனர். […]
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கோவை பாரதியார் பல்கலைகழக வளாகத்தில் உள்ள வேதியியல் துறை அலுவலகத்தில் தீவிர சோதனை. பேராசிரியர் நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் துணை வேந்தர் கணபதி, வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜன் சிக்கினர். லஞ்சப் பணத்தை வாங்கி கொடுப்பதில் இடைத்தரகராக செயல்பட்ட வேதியியல் துறை அலுவலகத்தில் பேராசிரியர் தர்மராஜன் முன்னிலையில் சோதனை. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அமர்வுக்கு அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா? என்பது குறித்த விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, 2015 – 16 முதல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை செங்குன்றம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகள் தொடர்ந்த […]
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரையடுத்து சோதனை மேற்கொண்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், துணைவேந்தர் கணபதியிடமுடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பாராதியார் பல்கலைக் கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர், கல்லூரியில் உள்ள உதவி பேராசியர் பணியிடத்திற்காக விண்ணப்பித்துள்ளார். அவருக்கு பணி வழங்க பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, 30 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 29 […]
மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவச் சீட்டு வாங்கி தருவதாக 20க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த நபரை கைது செய்தனர். சென்னை எழும்பூரை சேர்ந்த குமார் என்பவர், தமது மகனுக்கு மருத்துவச்சீட்டு வாங்குவதற்காக, ராஜேஸ்வரன் என்பவரிடம் 35 லட்சம் ரூபாயை கடந்த 2013 ஆம் ஆண்டு கொடுத்தார். பூனேவில் உள்ள மருத்தவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறிய ராஜேஸ்வரன், பின்னர் தலைமறைவானார். புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தர்மபுரியில் […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளதாவது வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். சென்னையில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். விழாவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், படைப்புகளை கண்காட்சியாக வைத்துள்ளனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். 2003-ல் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பயனாளிகள் எண்ணிக்கை 100லிருந்து 200 ஆகவும், பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதியுதவியை 25 ஆயிரம் […]
சென்னை ஐ.ஐ.டி.க்கு உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக உபகரணங்கள் வாங்க ரூ.103.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோராக்பூர் ஐ.ஐ.டி – ரூ.151.19 கோடியும், டெல்லி ஐ.ஐ.டி – ரூ.105 கோடியும், மும்பை ஐ.ஐ.டி – ரூ.96.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பு செய்துள்ளது.
நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும்.நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தகவல் தெரிவித்துள்ளது. நடப்பு 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் நடத்தப்படும் எனவும் மாநில பாடத்திட்டம் சேர்க்கப்படவில்லை என சிபிஎஸ்இ கடந்த 22ஆம் தேதிகளில் திட்டவட்டமாக அறிவிப்பு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் கல்வி ஆண்டு முதல் எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையினை மத்திய அரசு கைவிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் படி 8-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3000 அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை வரும் கல்வி ஆண்டு முதல் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்திருக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் […]
உலகில் உள்ள அனைத்து பெண்களின் கல்விக்காக நிதி திரட்டும் திட்டத்திற்காக 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மலாலாவுடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது. இத்திட்டம் குறித்து மலாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அவர்களது எதிர்காலத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள், சமூக சேவை ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் அதிகாரத்தை […]
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் பல வசதிகளை ஏற்படுத்துவது வழக்கம்.இந்நிலையில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. தான் தத்தெடுத்துள்ள பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரபுரம் என்ற கிராமத்தை திமுகவின் கனிமொழி எம்.பி. தத்தெடுத்திருந்தார்.அந்த கிராமத்துக்கும், அங்குள்ள மக்களுக்கும் தேவையான பல அடிப்படை வசதிகளை செய்தார். சில மாதங்களுக்கு முன்பு 68 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள […]
சென்னை அமைந்தகரையில் 41வது புத்தக காட்சி நடந்தது. இதில் ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆக்கப்பட்டதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 2017 ஆண்டில் ரூ.10 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது.750 அரங்குகளில் ஒரு கோடி புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த வருடம் ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆக்கப்பட்டது. இதனை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.