செண்டாக் நிர்வாகம், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர வியாழக்கிழமை முதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. நீட் தேர்வின் மூலம் தகுதி பெற்ற மாணவர்கள் 8ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.centaconline.in என்ற இணையதளத்துக்குச் சென்று காலை 10மணி முதல் மாலை 5மணி வரை விண்ணப்பிக்க முடியும். மேலும் உதவிக்கு 0413 2655571 என்ற […]
நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதார் கட்டாயம் என்கிற மத்திய கல்வி வாரியம் விதித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 2018ம் ஆண்டு மாணவர்கள் எழுத போகும் நீட் தேர்விற்கு ஆதார் எண் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும், ஆதார் அட்டையை அடையாள அட்டையாக காட்டவேண்டும் என்றும் மத்திய அரசின் உயர் கல்வி துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. மேலும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், […]
முதல் முறையாக தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 8.63 லட்சம் மாணவ – மாணவியர் எழுதுகின்றனர்.தமிழகம் முழுவதும் 2,795 தேர்வு மையங்கள் நடைபெற்றுவருகிறது. 43,190 தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்படுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,000 பறக்கும் படைகள் தயாராக உள்ளனர்.சென்னையில் 49,422 மாணவ – மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.சென்னையில் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 மாணவர்கள் பிளஸ் டூ ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் பிடிபட்டனர். பிளஸ் டூ பொதுத் தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று நடந்த ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரம் பேர் எழுதினர். இதில் காப்பி அடித்தல், திரும்பி பார்த்தது உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 பேரை பல்வேறு இடங்களில் கண்காணிப்பாளர்கள் பிடித்தனர். திருச்சியில் 6 பேரும், வேலூரில் […]
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்து 7 ஆயிரத்து 20 மாணவ மாணவிகள் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரத்து 689 பேர் தனித் தேர்வர்கள். இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் மாநிலம் முழுவதும் 50,000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
மத்திய அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டி வெளியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஸ்டாஃப் செலக்சன் கமிசன் எனப்படும் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு பிப்ரவரி 17முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாளை முன்கூட்டியே பெற்ற ஒருசில பயிற்சி மையங்கள் பணம்பெற்றுக்கொண்டு தேர்வர்களுக்கு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பிப்ரவரி 27ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தின் முன் தேர்வர்கள் […]
இன்று சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தியா முழுவதும் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இத்தேர் வை எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பொதுத்தேர்வுகள் இந்தியா முழுவதும் இன்று தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வை 4,453 மையங்களில் 16 லட்சத்து 38,552 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 4,510 பேர் மாற்றுத்திறனாளிகள். வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை […]
தமிழகம் முழுவதும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் செட் தகுதித்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய மாநில அளவில் செட் எனப்படும் தகுதித்தேர்வை அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 26 துறைகளுக்கு நடத்தப்படும் செட்தேர்வில் பங்கேற்க இந்த ஆண்டு 44 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக சென்னையில் 11 மையங்களும், தமிழகம் முழுவதும் 58 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு, இன்று […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அருகே தனியார் பள்ளியில், கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த எல்கேஜி மாணவனின் குடும்பத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் சீனிவாசபுரம் கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியின் எல்கேஜி மாணவன் கீர்த்தீஸ்வரன், திறந்திருந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த செய்தி அறிந்து துயரமுற்றதாக முதலமைச்சர் கூறியுள்ளார். கீர்த்தீஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் இதுபோன்று […]
உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு நடந்த தேர்தல் தொடர்பான ஆட்சேபங்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் விதிகள் பின்பற்றப்படாததால், புதிதாக தேர்தல் நடத்த கோரியும், புதிய நிர்வாகிகள் பதவியேற்க தடை விதிக்கவும் வழக்கு தொடரப்பட்டது. மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 83 ஆயிரத்து 253 வாக்காளர்களில், 58 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்ததால், இந்த தேர்தல் செல்லாதது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மனுதாரர் அளித்த மாற்று […]
வருகிற அக்டோபர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு தேதியும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம், நடப்பாண்டுக்கான தேர்வுகள் திட்ட அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரத்து 58 காலி பணியிடங்களுக்கான, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தெரிவானவர்களில், சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு […]
இன்று 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கிய நிலையில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்று வருகிறது. 9 லட்சத்து 7 ஆயிரத்து 20 மாணவ மாணவிகள் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரத்து 689 பேர் தனித் தேர்வர்கள். தமிழ் முதல் தாள் தேர்வு தவிர அவரவர் மொழிப்பாடங்களை எடுத்த மாணவர்களும் அந்தந்த மொழிப் பாடத் தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 794 மையங்களும் சென்னையில் மட்டும் 156 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. […]
மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நீட் பொதுநுழைவுத் தேர்வில் 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் இடம் பெறும் என தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடப்பு ஆண்டில் உருது மொழியிலும் கேள்வித்தாள் இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்டங்களான என்.சி.இ.ஆர்.டி. சி.பி.எஸ்.இ. […]
தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம்,தஞ்சை பெருவுடையார் கோவில்,அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விசுற்றுலா செல்லும் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 200 பேர் செல்லும் வாகனங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஹரியானாவில் காவிமயமாகும் கல்வி; பள்ளிக்கூடங்களில் இனிமேல் “காயத்ரி மந்திரம்”-கட்டாயமாக சொல்ல வேண்டும் என அம்மாநில கல்வித்துறை உத்தரவு பிறபித்துள்ளது. ஏற்கனவே அம்மாநில பள்ளிகளில் பகவத்கீதை ஸ்லோகங்கள் பாடமாக ஆக்கி உள்ளனர்.கார்ப்பரேட்களின் வேட்டைகாடாக நாட்டை ஆக்கியவர்கள். அந்த ரணத்தை மறக்கடிக்க மறைநூலில் இடம் தேடுகிறார்கள்.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சியை அளிப்பதோடு, 7 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் அனுமதியையும் பெற்று ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் தமிழக கல்வித்துறையோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. மேலும், கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியையும் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன […]
அண்ணா பல்கலைகழக நிர்வாகம் தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள், 11 ஆம் வகுப்பு பாடத்தை கூட சரியாக படிக்காமல் கல்லூரிக்கு வந்துவிட்டதால் தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டதாக, வினோத விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நிகர் நிலை பல்கலைகழகங்கள் தவிர்த்து இயங்க கூடிய அனைத்து பொறியியல் கல்லூரிகளும் சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. மொத்தம் உள்ள 565 பொறியியல் கல்லூரிகளில் 466 கல்லூரிகளில் தான் இந்த ஆண்டு மாணவர் […]
நவீனமுறையில் டேப் லெட்(tap let) மூலம் சேலம் மாவட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்றில் படங்களையும் எழுத்துக்களையும் சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகின்றது. ஆசிரியைகளின் புதிய முயற்சியால் மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். சேலம்-ஏற்காடு மெயின்ரோட்டில் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தான், நவீன ஆரம்ப கல்வி முறையில் கற்பிக்கப்படுகின்றது. 1955ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது முதல், கால மாற்றத்துக்கேற்ப தன்னை புதிப்பித்து இன்னும் சிறந்தப்பள்ளியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நடப்பாண்டு முதலாம் […]
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் குளிரில் தீப்பந்தம் ஏந்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம் என இரவு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட அவர்கள், துணைவேந்தருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கடந்த ஓராண்டில் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட பல அதிரடி நடவடிக்கைகளால் தங்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு தகுதிபெற ஒரு மாணவர் குறைந்தபட்சம் 75 விழுக்காடு வருகைப் பதிவிட வேண்டும் என்ற உத்தரவையும் மாணவர்கள் கடுமையாக […]
சென்னை உயர்நீதிமன்றம் இந்தியை தாய்மொழியாக கொண்ட 24 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கட்டாயத் தமிழ் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டுள்ளது. 2006-ல் தமிழகத்தில் தமிழை கட்டாயமாக்கி சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் தேர்வு கட்டாய உத்தரவுக்கு எதிராக சென்னை ராயபுரம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 24 பேர் வழக்கு தொடர்ந்தனர். தாங்கள் இந்தி வழியில் ஆரம்பக் கல்வி பயின்றதாக்வும், ஆறாம் வகுப்புக்குப் பிறகும் தமிழ் ஆசிரியர் நியமிக்கப்படாததால் இந்தியிலேயே படித்து வருவதாகவும், அவர்கள் தெரிவித்திருந்தனர். மனுவை […]