செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் குமரெட்டியாபுரம் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம […]
தூத்துக்குடியில் செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் […]
தூத்துக்குடியில் காமராஜர் கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் […]
விடைத் தாளில் காதலில் விழுந்ததால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் எழுதி வைத்துள்ளான். உத்தரப்பிரதேசத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மாணவன், தனது தேர்வு தாளில் காதல் கதையை எழுதி வைத்துள்ளான். தான் பூஜா என்ற பெண்ணை காதலிப்பதாகவும், காதலில் விழுந்ததால் தேர்வுக்காக படிக்க முடியவில்லை என்றும் மனமுருக எழுதியுள்ளான். மற்றொருவனோ, விடைத் தாளில் ரூபாய் […]
தனிப்படை போலீசார் சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 9 சிறுவர்கள் உள்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.எஸ்.சி பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு கணிதத்தேர்வின் வினாத்தாளும், 12-ம் வகுப்பு பொருளாதார இயல் தேர்வுக்கான வினாத்தாளும் வெளியானதை அடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. இந்நிலையில், வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீசார் ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். […]
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்த இலவச கையேட்டை http://www.ammakalviyagam.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அம்மா கல்வியகம் சார்பில், நீட் போட்டித்தேர்வுக்கான இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, அரிசின் விதியை மீறி பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ ஜராக்ஸ் எடுத்து கொடுக்கும் தனியார் ஜராக்ஸ் கடைகள்.. தேர்வு துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், ஜராக்ஸ் கடையின் உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் அரசு பள்ளிகளிலேயே படிப்பைத் தொடர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அங்கன் வாடி குழந்தைகள் 5 வயதுக்கு மேல் தனியார் பள்ளிக்கு செல்வதாகவும், இதை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று அரசுப் பள்ளியிலேயே அவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அகில […]
மாணவர்கள் வரவேற்பு , பாடங்களை புரிந்து படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது நடக்கின்ற பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு சவால் விடும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு நீட் தேர்வை எதிர் கொள்வதில் அச்சம்..! போட்டி தேர்வுகளில் வெற்றிகளை பறிகொடுக்கும் பரிதாபம்..! என நீடித்து வந்த தமிழக மாணவர்களின் சோகத்தை போக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிரடி முயற்சிகளை கையாண்டு வருகின்றது..! […]
உத்தரப்பிரதேசத்தில் 600 மருத்துவ மாணவர்கள் விடைத்தாளை பணம் கொடுத்து மாற்றி, எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முசாபர்பூரில் பல்கலைக்கழக அறையில் இருந்த எம்.பி.பி.எஸ். விடைத்தாளை மாற்ற மாஃபியா கும்பலிடம் பணம் கொடுத்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் விடைத்தளை நிபுணர்கள் மூலம் எழுதி, அதை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பான அறையில் உள்ள விடைத்தாளுக்கு பதிலாக மாற்றி வைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக, […]
தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்கள் விதிகளின் படி கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் குழு அமைக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக் கட்டடங்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரில் கூரை கொட்டகையில் இயங்கிவரும், செந்தில்முருகன் மேல்நிலைப் பள்ளிக்கு, நபார்டு திட்டத்தின் கீழ், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டமன்ற பேரவையில் பதில் அளித்துள்ளார். அதேபோல் பர்கூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.
SSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை – செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்துக்கொண்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பாடத்திட்டம் குறித்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் அச்சபடத்தேவையில்லை என்றார். SSLC examination for the SSLC examination: […]
தனியார் பள்ளிகள் மத்திய, மாநில கல்விவாரியத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளதா.? இல்லையா.? என்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கீகாரம் குறித்த விளம்பர பலகைகள் பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்ய கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும். வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும். அதேபோல் 45-50 நாட்களுக்குள் ஒரு செமஸ்டர் தேர்வை நடத்துவதால் மாணவர்களின் நேரம் விரையமாகிறது என உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் செய்தியாளர்களுக்கு அளித்த தெரிவித்துள்ளார்.
நெல்லை: ஏர்வாடியில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் எஸ்.ஏ. இந்து துவக்கப்பள்ளி பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு கண் பாதிப்பு கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பள்ளி ஆண்டுவிழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர் பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட விவகாரம் காரணமாக கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம் பெறும் என்றும், பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார். ஈரோட்டை அடுத்த வெள்ளோட்டில் நாட்டு நல பணித்திட்ட முகாமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் 412 நீட் தேர்வு மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த முழு விபரம் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மாணவ – மாணவிகள் 10-ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். தேர்வில் 1 மற்றும் 2 மதிப்பெண் கேள்விகள் பாடப்புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் கேட்கப்படும் கேள்விகளில் இருந்து கேட்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு அந்த கேள்விப் பட்டியலில் இல்லாமல் பாடத்துக்குள் இருந்து வேறு சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் விடையளிக்க கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இந்தியா முழுவதும் பல் மருத்துவ படிப்பு முதுநிலைகளுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பெற பதிவிறக்கம் செய்யலாம் என்று கீழ்கண்ட இணையதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnhealth.org மற்றும் http://tnmedicalselection.org மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கடைசியாக மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . மார்ச் 26ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநில அரசின் சார்பாக பள்ளிக்கல்வி திட்டத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.மேலும் வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்திற்கான சி.டி.யை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 21-ந்தேதி இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். […]