அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி,மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த,நிலையில் அவரை கைது செய்ய போலீசார் அவரது வீட்டு முன் முகாமிட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே வர நிர்மலா மறுத்து உள்ளேயே பதுங்கியுள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் கணிதப் பேராசிரியையான நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக 4 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதால், நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை நிரந்தரமாக […]
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,மாணவிகளை பாலியல் தேவைக்கு இணங்க வற்புறுத்தியது குறித்தும், இதில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய நிர்மலா தேவி என்ற உதவிப் பேராசிரியர், சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியாகியிருப்பது […]
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேராசிரியை மற்றும் அவருடன் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பின்னர் துணைவேந்தர் செல்லத்துரை, சிண்டிகேட் உறுப்பினர் திவாகர் 5 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு பேராசிரியை நிர்மலா தேவி […]
சிறப்பாசிரியர் தேர்வு எழுதிய 300-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் செங்கோட்டையனை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர். உடற்கல்வி, தையல், இசை மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உள்ள ஆயிரத்து 325 காலிப்பணியிடங்களுக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதி 7 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கைகளைக் […]
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்த தொடர்ச்சியான புகார்களின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முறைகேட்டில் தொடர்புடைய பிரம்மநாயகம், குணசேகரன் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமையன்று […]
5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை ஐ.ஐ.எம். எனப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு, நிர்வாகச் செலவு, ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்த ஆலோசித்துள்ளதாக ஐஐஎம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முந்தைய ஆண்டு கல்விக் கட்டணத்தை விட 80 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. திருச்சி ஐ.ஐ.எம்.மிலும் முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் […]
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மே 2-ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும், ஜூன் 1-ம் தேதி அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிப்போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 1-ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் […]
முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உள்ளிட்ட பல்கலைக் கழக நிர்வாகிகள் 6 பேருக்கு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில், நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சட்ட பல்கலை கழகத்தில் 2016-17ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குரிய 74 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உட்பட நிர்வாகிகள் 6 பேர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
சென்னை ஐஐடி வளாகத்துக்குள் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் […]
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 5000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி பூங்கா அமைவதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். இப்பூங்காவின் கட்டுமானப் பணிகள் முழுமையடையும்போது உலகில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாக இது திகழும். தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பூங்கா ரூ .25,000 கோடி முதலீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. உலகின் பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி பூங்கா 11,000 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, […]
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்துளளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெருமளவில் சொத்துகள் கொண்ட தமிழக பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வரும் ஜூன் மாதம் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களை தாரை வார்க்க திரைமறைவில் ரகசியமாக மத்திய பா.ஜ.க. அரசுடன் கைகோர்த்து […]
பாமக நிறுவனர் ராமதாஸ், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பாவை பத்து நாட்களுக்குள் மாற்றாவிட்டால், மாணவர்கள் நீதி கேட்பார்கள் என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக, பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தமிழகத்தில் ஆளுநரே ஆட்சி நடத்தி வருவதாக விமர்சித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இமாச்சலப்பிரதேசத்தில் சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 3 பேர் கைதாகியுள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், உடற்கல்வி ஆசிரியர், உதவியாளர் ஆகிய மூவரை காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளியல் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அந்த நபர்களின் கைகளில் கேள்வித்தாள்கள் கிடைத்ததாகவும் அதை வேறொரு காகிதத்தில் எழுதி மாணவர்களுக்கு அனுப்பியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் டெல்லி அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே […]
அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறந்த கல்வியாளர்களை வேறு மாநிலங்களில் துணை வேந்தர்களாக நியமிப்பது சகஜம்தான் என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை தமிழக ஆளுநர் நியமித்தது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்தியாவில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள் பல்வேறு மாநிலங்களில் நியமிக்கப்படுவது வழக்கம் என்றும் அது போல் தான் அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஆளுநர் துணை வேந்தரை நியமனம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், […]
டெல்லியில் மகளின் கல்விக் கட்டணத்துக்காக, சாராய கடத்தலில் ஈடுபட்ட எம்பிஏ பட்டதாரி கைதாகியுள்ளார். அரியானாவிலிருந்து டெல்லிக்கு சாராயம் கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். டெல்லியில் டாப்ரி (Dabri) என்ற இடத்தில் கார் ஒன்றை சோதித்த அவர்கள், 23 அட்டைப் பெட்டிகளில் சாராயம் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட குர்கானைச் சேர்ந்த மோகித் கோஸ்வாமி (Mohit Goswami), என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில், எம்.பி.ஏ. மற்றும் பி.டெக் பட்டதாரியான அவர், சிங்கப்பூரில் நிறுவனத்தில் வேலையிழந்து 3 […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டது குறித்த எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேசனல் பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மையத்தைத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பான எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு […]
இன்றுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைகின்றன. கடந்த மாதம் 1-ஆம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். கடைசி நாளான இன்று கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி – வேதியியல், சிறப்புத் தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. […]
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பேராசியரை துணைவேந்தராக நியமிக்கும் முடிவை ஆளுநர் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா என்ற பேராசிரியர் நியமிக்கப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நிர்வாகத்திறன் கொண்ட கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் திணிப்பது கண்டிக்கத்தக்கது […]
தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், National Institutional Ranking Framework (NIRF) India Rankings 2018 என்ற பெயரில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், ரேங்கிங் பட்டியலை வெளியிட்டார். 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் […]
சி.பி.எஸ்.இ. , பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வு மீண்டும் நடைபெறாது என அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்புக்கான கணித பாட வினாத்தாளும், 12ஆம் வகுப்புக்கான பொருளியல் பாட வினாத்தாளும், வாட்ஸ்-ஆப் மூலம் முன்கூட்டியே வெளியானதை அடுத்து அந்த இரு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 12ஆம் வகுப்பு பொருளியல் தேர்வு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்ததால், விரைவில் 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என […]