பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் ,பெண்மையை இழிவுப்படுத்தும் எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியையே பாலியல் வலை வீசிய விவகாரம், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் புரோஹித் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் தெரிவித்த கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. அவர்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களால் கூட ஏற்க முடியாதவை. தனது செயலுக்காக ஆளுநர் மன்னிப்புக் கேட்டார். பெண்மையைப் […]
சிபிசிஐடி போலீஸார்,பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக தலைமறை வான மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககப் பேராசிரியரின் மனைவியிடம் நேற்று விசாரணை நடத்தினர். மேலும் இவ்வழக்கு தொடர் பாக மற்றொரு பேராசிரியரும் தலைமறைவாக உள்ளதால் சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கல் லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தவறாக வழிகாட்டியதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழக […]
அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசுக்கும்-ஆளுநருக்கும் இடையே நிர்மலாதேவி பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பகடைக்காயும் அல்ல; பலாக்காயும் அல்ல என பதிலளித்துள்ளார். சென்னை திருமங்கலத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த அவர், கன்னியாகுமரியில் கடல்சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தொடர்ந்து 3வது நாளாக,அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக, தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விருதுநகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் […]
அமைச்சர் செங்கோட்டையன் ,பள்ளிக்கல்வித்துறையில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கல்விக் கண்காட்சியை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய செங்கோட்டையன், மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை ; முயற்சி நின்றாலும் மரணம் தான் என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பேராசிரியை நிர்மலா தேவியிடம் , மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்று வருகிறது. நிர்மலாதேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், முனைவர் படிப்பு படித்து வந்த கருப்பசாமி, பல்கலைக்கழக அதிகாரி முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக நிர்மலா […]
பள்ளிக்கல்வித்துறையில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கல்விக் கண்காட்சியை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய செங்கோட்டையன், மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை ; முயற்சி நின்றாலும் மரணம் தான் என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ,அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் பயிலும் மாணவிகள் நான்கு பேரிடம் பாலியல் தொழிலுக்கு ஆசை காட்டியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் நிர்மலா தேவி மீது அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நிர்மலா தேவியை திங்கள்கிழமை கைது […]
நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சாத்தூர் நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் […]
நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிபிசிஐடி போலீசார் அளித்த மனுவை ஏற்று இந்த வழக்கு, அருப்புக்கோட்டை […]
அருப்புக்கோட்டையில் சந்தானம் குழு, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, இன்று விசாரணை நடத்துகிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக உயர்பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் என்பவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். சந்தானத்திற்கு உதவியாக, பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அன்னை தெரசா கல்லூரி […]
அமைச்சர் செங்கோட்டையன் ,தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இனி எந்த தேர்வினை கொண்டு வந்தாலும், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்களை தயார் படுத்தி வருவதாக கூறினார். இதனிடையே, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மே மாதம் இறுதிக்குள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு […]
பாமக நிறுவனர் ராமதாஸ், பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது குறித்த வழக்கை குழி தோண்டி புதைக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அப்பிரிவின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குனருமான ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலிடத்திலிருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் ஜெயந்த் முரளிக்கு பதில், 2015-ஆம் ஆண்டில் […]
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், நீட் தேர்வில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஏழை மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி வருகிறார் . அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி அனிதா. இவர் 2016-17ம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வியில் பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவர் ஆக வேண்டுமென்ற தீராதா கனவு கொண்டிருந்தவர். அதுவரை மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்த தமிழக கல்வித் திட்டத்தில் 2017ல் மத்திய அரசின் நீட் […]
பள்ளிக்கல்வித்துறை,தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் நாளை நிறைவடைய உள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. நாளை சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வுடன் பொதுத்தேர்வு நிறைவடைகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ஆம் தேதி துவங்கி மே 7-ஆம் தேதி நிறைவடையும். […]
தேவாங்கர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜனிடம் , பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேராசிரியை நிர்மலா தேவி வற்புறுத்திய ஆடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலாதேவி மீது வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கை அருப்புக்கோட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ,பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பின்னணியில் உள்ள “பசுத்தோல் போர்த்திய புலிகள்” யார், யார் என்பதை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வரை சரியாக வழிநடத்த வேண்டிய ஆசிரியர்கள் இதுபோன்ற தவறான பாதைக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது “வேலியே பயிரை மேய்வது” போன்று உள்ளது என தெரிவித்துள்ளார். ஒரு பேராசிரியர் இவ்வளவு தைரியமாக செயல்பட்டிருக்கின்றார் என்றால் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் […]
சிபிஎஸ்இ ,நீட் தேர்வின்போது தேர்வர்கள் வெளிர்நிறமுடைய, வழக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், தேர்வு தொடங்குவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பே தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மருத்துவ, பல்மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மேமாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு தேர்வுக்கு வந்த மாணவர்களின் முழுக்கைச் சட்டையை வெட்டச் சொன்னது, கம்மலைக் கழற்றச் சொன்னது, சூவைக் கழற்றச் சொன்னது, ஆடையைக் களைந்து சோதனையிட்டது உள்ளிட்ட பல்வேறு செயல்கள் […]
சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஏழு குழுக்களை அமைத்துள்ளனர். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட சிபிசிஐடி ஆய்வாளர்களுடன் விசாரனை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் உதவி விசாரணை அதிகாரி முத்து சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், 7 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. மதுரை […]
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் ,நிர்மலா தேவி விவகாரம் குறித்து நாளை அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த வழக்கு குறித்து விசாரிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் இவர். விசாரணையை தொடங்குவதற்காக இன்று, மதுரை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இன்று மாலை அருப்புக் கோட்டை செல்ல உள்ளதாக சந்தானம் கூறியுள்ளார்.மேலும் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 நாள் விசாரணை […]