பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170 லிருந்து 185 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். க்யூ ஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சியாளர்கள்,ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் திட்டம், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஆக முடியும் என்ற சூழலை உருவாக்கிவிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர். பிரதமர் அலுவலகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முடிந்த பின்னர் அளிக்கப்படும் 100 நாள் பயிற்சியில், மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதன் பின்னர் மொத்த மதிப்பெண்கள் […]
உதவி கல்வி அதிகாரி இனி வட்டார கல்வி அதிகாரி என அழைக்கப்படுவார் என்றும், அவர் தனது வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்றும், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. உதவி கல்வி அதிகாரிகள் இனிமேல் வட்டார கல்வி அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் இனிமேல் தொடக்க கல்வி துறையில் உள்ள பள்ளிகளை மட்டும் அல்லாமல், […]
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மைய திறப்பு விழா இன்று நடந்தது.இதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வரும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றம் இல்லை. புதிய பாட திட்டத்தில் 185 நாட்கள் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். 1, 6, 9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்த அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 574 அரசுப் பள்ளிகளில், 238 அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் ஓசூர் அருகே உள்ள மாசிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 29 மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறை என கூறப்படுவதை மறுத்துள்ள மாவட்ட […]
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைதான நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் பேராசிரியை நிர்மலாதேவி ,மாணவிகளை தவறாக திசை திருப்ப முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி, ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமீன் மனு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 11ந்தேதி நிராகரிக்கப்பட்டது. பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கோரி அவரது […]
கல்லூரிக்கல்வி இயக்கக அதிகாரிகள்,தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்பட்டு வரும் 1,543 கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறைக்கு பின் ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என தெரிவித்தனர். தமிழகத்தில் 91 அரசுக் கல்லூரிகள், 8 அரசு கல்வியியல் கல்லூரிகள், 40 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 1,243 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 1,543 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கலை […]
இந்த ஆண்டுடன் பிளஸ் 2வில், 1,200 மதிப்பெண் முறை, முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், 8.60 லட்சம் மாணவ – மாணவியர் பங்கேற்று, 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். வரும், 21ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு அறிமுகமாகி, 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, ஆறு […]
பி.இ ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது . பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைனில் விண்ணப்பம்: 2018-19-ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தல், கலந்தாய்வு, சான்றுகள் சரிபார்த்தல், இடங்கள் ஒதுக்கீடு அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்று அரசு அறிவித்தது. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைனில் விண்ணப்பம் இதனிடையே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 3ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் மே 30-ம் தேதி வரை பதிவு செய்யலாம். ஆன்லைன் […]
ப்ளஸ் டூ தேர்வு எழுதிய தமிழக மத்தியச் சிறைகளில் 73 பேரில், 4 பெண்கள் உட்பட 62 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மத்தியச் சிறையில் உள்ள தமிழழகன் என்பவர் ஆயிரத்து 50 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், வேலூர் சிறைக் கைதியான பால்ராஜூ ஆயிரத்து 22 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சென்னை புழல் சிறையில் உள்ள கூழை இப்ராஹீம் ஆயிரத்து 5 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். புழல், சேலம், கடலூர் மத்திய சிறைகளில் தேர்வெழுதிய […]
சென்னை உயர்நீதிமன்றம்,கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதவியல் துறை பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,தேர்வில் தோல்வி ஏற்பட்டால், மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் துவண்டுபோய்விடக் கூடாது என கேட்டுக்கொண்டிருக்கிறார்.. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்வியை எதிர்கொண்ட மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் ஆறுதல்படுத்த, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். வாழ்க்கையில் சாதிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கும்போது, மதிப்பெண்கள் குறித்து, மாணவர்கள் கவலை கொள்ள கூடாது என்றும், மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றும் கல்வியாளர் நெடுஞ்செழியன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,பிளஸ்டூ தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நம்பிக்கையிழக்காமல் கடினமாக உழைத்து உயர்கல்விப் பாதையில் ஊக்கத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்க வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார். […]
231 மாணவ, மாணவிகள் பிளஸ் டூ பொதுத்தேர்வில் ஆயிரத்து 180 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 50 மாணவர்களும், 181 மாணவிகளும் ஆயிரத்து 180க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஆயிரத்து 151 முதல் ஆயிரத்து 180 மதிப்பெண்கள் வரை 4 ஆயிரத்து 847 மாணவ, மாணவிகள் எடுத்துள்ளனர். ஆயிரத்து 126 முதல் ஆயிரத்து 150 மதிப்பெண்கள் வரை 8 ஆயிரத்து 510 மாணவ, மாணவிகள் எடுத்துள்ளனர். 700க்கும் குறைவான மதிப்பெண்களை 3 லட்சத்து 47 ஆயிரத்து […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,மாணவர்களின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, சென்னையில் செய்தியாளர்களிடம் அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு மன அழுத்தம் தரக்கூடாது என்ற நோக்கில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். போட்டி தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் டூ தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். மாணவர்களின் […]
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன்,கேள்வித் தாள்களில் தவறான கேள்வி கேட்கப்பட்டாலும் சரியான விடை அளிக்கும் அளவுக்கு தமிழக மாணவர்கள் முன்னேறியிருப்பதாக தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திறந்த வாகனம் மூலம் பல்வேறு இடங்களில் கமலஹாசன் மக்களை சந்தித்து வருகிறார். கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தியபின் பயணத்தைத் தொடங்கிய அவர், கன்னியாகுமரி ரயில்வே சந்திப்பு, தென் தாமரைக் குளம், பணக்குடி உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்தார். மக்களிடம் தனது பலத்தை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏற்கனவே […]
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரியில் +2 தேர்வில் 87.32 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுப் பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சார்ந்த 15 ஆயிரத்து 75 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதாகவும், அவர்களில் 13 ஆயிரத்து 163 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். மாணவர்கள் 5 ஆயிரத்து 842 பேரும், மாணவிகள் 7 ஆயிரத்து 321 தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்ச்சி சதவீதம் 87.32 சதவிதமாக உள்ளதாகவும், […]
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஜூன் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மருத்துவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கையேடுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவுவது தீவிர நடவடிக்கை மூலமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு அதனை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில்,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை நடத்தியது. இரண்டாம் கட்ட விசாரணையின் ஒருபகுதியாக நேற்று மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டைக்குச் சென்ற சந்தானம் குழுவினர் தேவாங்கர் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம் 31-ஆம் தேதிக்குள் விசாரணை நிறைவடையாது என்றும் சிறையில் இருக்கும் இரண்டு பேர் சி.பி.சி.ஐ.டி. கட்டுப்பாட்டில் இருப்பதால் அடுத்த வாரம் அவர்களிடம் விசாரணை […]