இன்று மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 -ஆம் தேதி நடைபெற்றது. மத்திய இடைநிலைக் […]
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்பி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிப்பதாக உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட வினாக்களில் 40க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக உள்ளன என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்று மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 -ஆம் தேதி நடைபெற்றது. மத்திய இடைநிலைக் […]
பள்ளிக் கல்வித்துறை,நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் தொடங்கும் என அறிவித்துள்ளது. பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மற்றும் கூடுதல் சுகாதாரத்துறை செயளாளர் ராஜீவ் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுகூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11ம் வகுப்பு பாட புத்தகத்தில் உள்ள பிழைகள் திருத்தப்பட்டிருப்பதாகவும், தமிழ்மென்பொருள் மூலம் இனி பாடதிட்டங்கள் பிழை இல்லாமல் உருவாக்கப்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ,தமிழகத்தில் 41 உறுப்பு கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது இந்திய வரலாற்றில் இல்லாத ஒன்று என தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் இன்று தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், பொறியியல் படிப்பில் சேருவதற்காக மாணவர்கள் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகம் விண்ணப்பித்து இருப்பதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் நேற்று திறந்த நிலையில் மாணவர்கள் புதிய பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸில் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸ் குறித்து தமிழக போக்குவரத்து அதிகாரி சென்னையில் பேட்டியளித்தபோது இதனை தெரிவித்தார். மாணவர்கள் காட்டும் பஸ் பாஸ்சை ஏற்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் நேற்று திறந்தது. […]
பள்ளி வேனில் 17 மாணவர்கள், ஆட்டோவில் 4 மாணவர்களுக்கு மேல் அழைத்துச் சென்றால் அந்த வாகனங்களின் பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 30,500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி வாகனங்களை தவிர, ஏராளமான மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ, வேன், ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்துகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் டயர்கள், […]
இன்றுடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறையை அண்ணா பல்கலைகழகம் அறிமுகப்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை, ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 971 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜுன் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், ஜூலை மாதத்தில் கலந்தாய்வும் தொடங்கும் என்று […]
பாமக நிறுவனர் ராமதாஸ்,டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வயதுவரம்பை 40 ஆக உயர்த்துவதே முழு பயனளிக்கும் என, வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது ஓரளவு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான் என்றாலும் கூட போட்டித்தேர்வர்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நடவடிக்கையாகும். […]
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ,கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாததால், பள்ளிகள் திறப்பை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் 41 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாத நிலையில், பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலை சமாளிப்பதற்கான மின்விசிறி வசதி கூட பல பள்ளிகளில் […]
எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 பணியிடங்களுக்கு வயது உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்குபெறுவதற்கான வயது உச்ச வரம்பினை உயர்த்திடுமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளர் […]
இன்று கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது . தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதியான இன்று திறக்கப்பட்டது . இதனை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு புதிய […]
குரூப்-1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயதும், பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது என்று பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்வு என்ற எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயதாகவும், பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாகவும் உயர்வு என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாளையுடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறையை அண்ணா பல்கலைகழகம் அறிமுகப்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜுன் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை, 1 லட்சத்து 40 ஆயிரத்து 516 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜுன் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், ஜூலை மாதத்தில் கலந்தாய்வும் […]
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் இன்று திறக்கப்பட இருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கிய கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை நிறம் மாற்றப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை […]
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 90 ஆயிரம் பேருக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பள்ளி மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி கடந்த கல்வி ஆண்டில் (2017-18) அரசுப் பள்ளி, கல்லூரி, […]