தமிழக அரசு,அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தலைமைச் செயலகத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் கழக நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 100 வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வு எழுதும் முறை முற்றிலும் மாற்றியமைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் நீட் தேர்வில் மாணவர்கள் கஷ்டப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்காலத்தில் மத்திய அரசு எந்த தேர்வை கொண்டுவந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார். முன்னதாக அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வரும் திட்டம் ஆய்வில் உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும் […]
நீட் தேர்வில் தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை தொடர்பாக பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இன்னும் எத்தனை அனிதா, பிரதீபாக்களை இழக்க போகிறோம்? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு என்ன செய்தது? என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நீட் தேர்வில் தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை தொடர்பாக பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோவு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது . நீட் தேர்வு முடிவுகள் என்ற தளத்தில் சி.பி.எஸ்.இ. வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் […]
மேலும் ஒரு மாணவி செஞ்சி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அப்பகுதியில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயக் கூலித் தொழிலாளியான இவரது மகள் பிரதீபா (18). கடந்த 2016-2017-ம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று பொதுத்தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயில கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எழுதினார். […]
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கையெழுத்திட பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர் .3 கோரிக்கைகள் நிறைவேறும் […]
நடிகர் ரஜினிகாந்த், மாணவி பிரதீபா உயிரிழந்தது குறித்து வேதனை தெரிவித்த நிலையில், நீட் தேர்வால் உயிர்ப்பலிகள் தொடர்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த்,காலா படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்ததாகவும், எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவுதான் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியது , காவிரி விஷயத்தில் பேசி தீர்வு கண்டால் நல்லது என்றும், கர்நாடக முதலமைச்சரை கமல் சந்தித்ததில் தவறில்லை என்றும் தெரிவித்தார். […]
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது .அமைச்சர் அன்பழகன், முதன்மை செயலர் சுனில்பாலிவால், துணைவேந்தர் சூரப்பா முன்னிலையில் வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் […]
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வை ஜூலை 1-5 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று மருத்துக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 2ஆம் கட்ட கலந்தாய்வை ஜூலை 16-21 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 10ம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மருத்துவ படிப்புக்காக தேசிய அளவில் நடத்தப்படும் தகுதித்தேர்வு கடந்த மே 6ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதிய இந்த தகுதித்தேர்வில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி 99.99 சதவிகித மதிப்பெண்ணுடன் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும், அவர் இயற்பியலில் 180க்கு 171 மதிப்பெண்களையும், வேதியலில் 180க்கு 160 மதிப்பெண்களையும் மற்றும் உயிரியலில் 360க்கு 360 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். தேர்வு முடிவுகள் சிபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ படிப்பிற்கான […]
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பவர் சிஸ்டம் ஆபரேசன் கார்ப்பரேசன் லிமிடெட். ‘போசோகோ’ (POSOCO) என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம் மத்திய மின்சாரத் துறையின் கீழ் செயல்படுகிறது. மின்சார அமைப்பின் செயல் முறைகள், பாதுகாப்பு, பொருளாதார திட்டங்கள், உள்ளிட்டவற்றில் இந்த நிறுவனம் பங்களிப்பு செய்கிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் பிரிவில் 45 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 19 இடங்களும் உள்ளன. மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். […]
இன்னும் ஒருவாரத்துக்குள் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல்மருத்துவப் படிப்புகளின் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் அச்சிடும் பணி தொடங்கியுள்ளது. ஒருவாரத்துக்குள் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னை அரசு பல்மருத்துவக் கல்லூரி, 18தனியார் பல்மருத்துவக் கல்லூரிகளில் […]
தனியார் பள்ளி பங்குதாரர்களிடையே சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் கேட்டு பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். ஏழுமாத்தனூர் கிராமத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9 பங்குதாரர்களால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதன் பங்குதாரர்களிடையே நீண்ட நாட்களாக கணக்கு, வழக்கு பிரச்சனை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. பள்ளி வளாகத்திலேயே அவ்வப்போது பங்குதாரர்கள் மோதலில் ஈடுவதாகக் கூறும் மாணவர்களின் […]
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் […]
இன்று மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 -ஆம் தேதி நடைபெற்றது. மத்திய […]
நீட் தேர்வில் பிழைகள் இருந்த 49 வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் கோரும் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டெக் பார் ஆல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வரும் நிலையில் அந்நிறுவனம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில், 180 வினாக்கள் கொண்ட நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. நேற்று […]
இன்று மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து மாணவி கல்பனா தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.இவர் இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல்,விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மேலும் ஓசி பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில […]
இன்று மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியனது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6 -ஆம் தேதி நடைபெற்றது. மத்திய இடைநிலைக் […]
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் நாளை காலை 9 மணிக்கு வெளியீடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு இந்த […]