நாளை நாடு முழுவதும் நீட் இளங்கலை நுழைவுத் தேர்வு.!
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இளங்கலை (NEET UG) 2023 தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது.
மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை நடத்தும், இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு(நீட்) நாளை முழுவதும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நீட் நுழைவுதேர்வுக்கு 20.87 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகம்.
மொத்த விண்ணப்பதாரர்களில், 11.8 லட்சம் பெண் விண்ணப்பதாரர்களும், 9.02 லட்சம் ஆண் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளனர். மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வு காகிதம் முறையில் ஆஃப்லைன் வழியாக நடத்தப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களில், ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு பிரிவுகள் என பிரிவு A 35 கேள்விகளையும்,, பிரிவு B 15 கேள்விகளையும் கொண்டிருக்கும். விண்ணப்பதாரர்கள் பிரிவு B இலிருந்து 10 கேள்விகளை முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்களும், தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.
தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) உத்தரவின் பேரில் நடத்தப்படுகிறது.
ஆங்கில மொழியை தேர்வு செய்தவர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி புத்தகம் வழங்கப்படும் என்றும், இந்தி அல்லது பிராந்திய மொழிகளை தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மொழி ஆங்கிலம் மற்றும் மற்றொன்று இந்தி அல்லது பிராந்தியமொழி ஆகிய இருமொழி தேர்வு புத்தகம் வழங்கப்படும் என NTA தெளிவுபடுத்தியுள்ளது.