மருத்துவப் படிப்புகளில் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு சென்னையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவு வெளிவருவதற்கான தாமதம் காரணமாக, தமிழக மாணவர்களின் நலன் கருதி மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ல் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அவகாசம் நீட்டிப்பு காரணமாக இருக்கை ஒதுக்கீடு முறை ஆகஸ்ட் 4, 5ல் நடைபெறுகிறது. மாணவர்களுக்கான மருத்துவக் கல்லூரி இடங்களின் முடிவுகள் ஆக. 6ம் தேதி வெளியிடப்படும் என மருத்துவ சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…