அனைத்து பள்ளிகளிலும் இன்று மேலாண்மைக் குழு கூட்டம் – தமிழ்நாடு அரசு!

TN Schools

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மதியம் 4 மணி மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

அதில்,  12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராமல் உள்ள மாணவர்கள் தொடர்பாக, பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க இன்று அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 10,12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களை அழைத்து மீண்டும் தேர்வு எழுத்த வைக்கவும், அப்படி இல்லையென்றால், ஐடிஐ, டிப்ளோமோ படிப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை நடைபெறுகிறது. குறிப்பாக, இடைநின்ற மாணவர்கள் அனைவரையும் தொழில் கல்வியில் சேர்க்க அரசு இலக்க நிர்ணயத்துள்ளது.

அந்த வகையில், மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ஆலோசனை கூறுதல், படிப்பை தொடர விருப்பமில்லா மாணவர்கள் கூறும் காரணத்தை அறிந்து தகுந்த வழி காட்டுதல். மாணவர்களின் வகுப்பு மாற்றத்தை உறுதி செய்தல். துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்தல்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தேர்ச்சி அடைந்தும் உயர் கல்விக்குச் செல்லாத மாணவர்கள் விவரங்களை அறிந்து முதன்மை கல்வி அலுவலரிடம் இன்று நடைபெற இருக்கும் மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளளவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்