அரசுப் பள்ளி மாணவர்கள் யாரும் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியாது – அதிர்ச்சி தகவல்!

Default Image

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. MBBS மற்றும் BDS இந்த ஆண்டு படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 5 ம் தேதி வெளியானது.
தமிழகத்தில் நீட் எழுதிய 1.23,078 பேரில் 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.இவர்களில் 31,239 பேர் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள். மேலும் அரசுப் பள்ளியில் பயின்று தேர்வு எழுதிய மாணவர்களில் 2,000 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 4 பேர் மட்டுமே 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளார் என்று கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற 2,000 மாணவர்களின் மதிப்பெண்ணும் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது, தமிழக அரசின் நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அனைவரும் குறைவான மதிப்பெண்ணையே பெற்றிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்