குரூப் 4 தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு.! இன்று முதல் பதிவேற்றம் – TNPSC அறிவிப்பு.!

tnpsc group 4

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கான குரூப் 4 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது.

தற்போது, இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி  நடந்து வருகிறது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் விடுபட்ட சான்றிதழை இன்று முதல் ஜூன் 7 வரை பதிவேற்றம் செய்யலாம் என TNPSC அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, TNPSC நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 4-ல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சரிபார்ப்புக்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாமல், குறைபாடாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 05.06.2023 முதல் 07.06.2023 மாலை 05.45 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு, தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்