பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2இல் தொடக்கம்- அமைச்சர் பொன்முடி.!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 2இல் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகளில் நீட் மருத்துவப்படிப்பு, பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு தரப்பட்ட துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான அடுத்தகட்ட முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களில் 2,28,122 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது, இதையடுத்து கடந்த ஜூன் முதல் வாரத்தில் இதற்கான ரேண்டம் எண் வெளியானது. இந்நிலையில் மாணவர்களின் பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும், மேலும் கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர் ஆர்வமாக உள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.