லஞ்ச ஒழிப்புத்துறை கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சோதனை!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரையடுத்து சோதனை மேற்கொண்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், துணைவேந்தர் கணபதியிடமுடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பாராதியார் பல்கலைக் கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர், கல்லூரியில் உள்ள உதவி பேராசியர் பணியிடத்திற்காக விண்ணப்பித்துள்ளார். அவருக்கு பணி வழங்க பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, 30 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 29 லட்சம் ரூபாயை காசோலை மூலம் பெற்றதாக புகார் எழுந்தது. ஆனாலும் உதவிப் பேராசிரியர் பணியிடம் சுரேஷூக்கு வழங்கப்படவில்லை என்ற கூறப்படுகிறது.
மேலும் தன்னிடம் 30 லட்சம் ரூபாயை துணைவேந்தர் கணபதி லஞ்சமாக பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் சுரேஷ் புகார் அளித்துள்ளதார். இதனை அடுத்து இன்று காலை பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் அதிரடியாக சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையை தொடங்கினர்.
பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் அறை மற்றும் அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அத்துடன் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த துணைவேந்தர் கணபதியையும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வரவழைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துணைவேந்தர் கணபதி வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024