நீட் பயிற்சிக்கு மட்டும் அனுமதி
அனைத்து பள்ளிகளிலும் கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தனியார் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டும் நடத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையின் போது, எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என தெரிவித்துள்ளது.