அமெரிக்காவில் 12 வயது சிறுவன் கல்லூரியில் 5 டிகிரி பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளார்.
க்ளோவிஸ் ஹங் என்ற 12 வயது சிறுவன் அமெரிக்காவின் புல்லர்டன் கல்லூரியில், மிகவும் இளம் வயதில் பட்டதாரியாகி சாதனை படைத்துள்ளார். க்ளோவிஸ் ஹங், ஐந்து அசோசியேட் பட்டங்களைப் பெற்றுள்ளார், மற்றும் ஆறாவது பட்டத்தை அடுத்த ஆண்டு பெற திட்டமிட்டுள்ளார்.
ஹங், வரலாறு, சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய வளர்ச்சி, கலை மற்றும் மனித வெளிப்பாடு, மற்றும் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய 5 துறைகளில் பட்டம் பெற்றுள்ளார். இது குறித்து அவரது தாயார், சாங் சோய் கூறும்போது, ஹங் எப்போதும் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொண்டே, இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி செல்பவர்.
இதனால் தான் அவரை கடந்த 2019இல் பள்ளியிலிருந்து நீக்கி, வீட்டில் இருந்து படிக்க வைக்க முடிந்தது. பள்ளி கல்வி முறை அவரின் ஆர்வத்திற்கு போதுமானதாக இல்லை, எனவே, கல்லூரி அவருக்கு சிறந்த தேர்வாக இருந்தது என்று ஹங்கின் தாயார் தெரிவித்தார்.
அதே நேரத்தில் வீட்டுக்கல்வி பாடத்திட்டத்தை முடித்த க்ளோவிஸ் ஹங், புல்லர்டன் கல்லூரியில் “சிறப்பு சேர்க்கை” திட்டத்தின் கீழ், கல்லூரி வகுப்புகளில் சேர முடிந்தது என ஹங் தாயார் மேலும் கூறினார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…