2018 தமிழக பட்ஜெட்: 345 இடங்கள் மருத்துவ படிப்பில் கூடுதலாக உயர்த்த நடவடிக்கை!

Default Image

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கல்வித்துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறைக்கு ரு.4,620 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குமரி, நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவ சேர்க்கை இடங்கள் கூடுதலாக 345 இடங்கள் உயர்த்தப்படும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயந்திரவியல் சிறப்பு மையத்துக்கு ரூ.13.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியக் கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்