பிளஸ் டூ ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் 16 மாணவர்கள் மீது நடவடிக்கை
ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 மாணவர்கள் பிளஸ் டூ ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் பிடிபட்டனர்.
பிளஸ் டூ பொதுத் தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று நடந்த ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரம் பேர் எழுதினர். இதில் காப்பி அடித்தல், திரும்பி பார்த்தது உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 பேரை பல்வேறு இடங்களில் கண்காணிப்பாளர்கள் பிடித்தனர்.
திருச்சியில் 6 பேரும், வேலூரில் 4 பேரும் மதுரையில் 3 பேரும் சிக்கியுள்ளனர். இதில் 6 பேர் தனித்தேர்வர்கள் ஆவர். முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்