வேளாண் பட்டபடிப்புகளுக்கு தடை
- வேளாண் பட்டப் படிப்புகளையும், தொலைதூர முறையில் வழங்கத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை மானியக்குழு கண்காணிப்பில், நாட்டில் பல்வேறு பல்கலைகள், தொலைதூரக் கல்வி முறையைச் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், விதிமுறைகளின்படி, தொழில் சார்ந்த படிப்புகளான பொறியியல், மருத்துவம், பிசியோதெரபி, பல் மருத்துவம், பார்மசி, நர்சிங், ஆர்க்கிடெக்சர் போன்ற படிப்புகளைத் தொலைதூர கல்வி முறையில் வழங்க இயலாது என பல்கலை மானியக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி, வேளாண் பட்டப் படிப்புகளையும், தொலைதூர முறையில் வழங்கத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஜூலை மாதம் முதலே நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொலைதூர வேளாண் பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..