மூடு விழா காண போகும் 63 இன்ஜி.கல்லூரிகள்..!!
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து படிப்பர்கள் இதனை அண்ணா பல்கலைகழகம் வழியாக பொது கவுன்சிலிங் நடத்தப்படும் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் வரவு குறைந்து காணப்பட்ட போதிலும் அண்ணா பல்கலை கழகம் ஒரு வழியாக கவுன்சிலிங்கை நடத்தி முடித்தது.
கவுன்சிலிங் ஆன்லைன்’ வழியாக நடத்தியது இதனால் மாணவர்களுக்கு சிரமம் சற்று குறைந்த போதும் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்த ஆண்டு, பொது கவுன்சிலிங்கில், 72 ஆயிரத்து, 648 இடங்கள் உட்பட, தொழிற்கல்வி, விளையாட்டு மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளையும் சேர்த்து, 74 ஆயிரத்து, 601 இடங்களே நிரம்பியுள்ளன. 97 ஆயிரத்து, 980 இடங்கள், மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன.
மொத்தம், 136 கல்லுாரி கள் மட்டுமே, 50 சதவீத இடங்களை, கவுன்சிலிங் வழியாக நிரப்பியுள்ளன. தமிழகத்தில் 550 கல்லூரிகள் பொறியல் கல்லூரி உள்ளது என கூறிய அண்ணா பல்கலை தற்போது 487 பொறியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளது என தெரிவித்த நிலையிலிருந்தே தெரிகிறது 63 கல்லூரிகள் மூடு விழா காணபோகிறது என்று.
DINASUVADU