மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை….
கல்வியை மேம்படுத்த வேண்டி குறிப்பாக பெண் கல்வியை உயர்த்த வேண்டி 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை வழங்குகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்த மாணவிகள் , கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் பேகம் ஹஸரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை என்ற திட்டம் ( முன்பு மௌலானா ஆசாத் திட்டம் ) ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரூ.10000 மும் மற்றும் 11-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.12000மும் இரண்டு தவணைகளில் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடி பயன் மாற்று முறையில் செலுத்தப்படும்வழங்கப்பட்டு வருகிறது. 2018-19-ம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மத்திய அரசின் பேகம் ஹஸரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை www.maef.nic.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் 15.09.2018 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.