தமிழகப் பள்ளிக் கல்வித்துறை 1, 6, 9ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்தின்படி வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.1 முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்களை உருவாக்கத் திட்டமிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களை வெளியிட்டுள்ளது.
QR code போன்ற சிறப்பு அம்சங்களுடன் 80 ஜி.எஸ்.எம். தாளில் 4 வண்ணங்களில் பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. விலையில்லாப் பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவ-மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 1, 6, 9ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.
11ஆம் வகுப்புக்கான பாடநூல்கள் விற்பனை ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கும். 1, 6, 9ஆம் வகுப்பு பாடநூல்களை www.textbookonline.tn.nic.in என்கிற இணையதளம் மூலமும் வாங்கலாம். நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்திலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…