பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடக்கம்!
10-ஆம் வகுப் பொதுத் தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ – மாணவிகள் மற்றும் 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் எழுதுகிறார்கள். தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முறைகேடுகளை தடுக்க 6,900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புழல் சிறைகளிலுள்ள 186 கைதிகள் 10-ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் அடுத்தமாதம் 20-ந்தேதி முடிவடைகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.