நீட் தேர்வில் இந்திய அளவில் 12 ஆம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5 ஆம் இடம் !

Default Image

நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33ஆம் இடம் பெற்றுள்ளார். நீட் தேர்வில் இந்திய அளவில் 12 ஆம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5 ஆம் இடம் பெற்றுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிளையில் உள்ள 200 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு ஜூன் -3ம் தேதி நடைபெற்றது.

1 லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் எழுதிய இந்த நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு ஜூன் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

முன்னதாக  நீட் தேர்வில் அகில இந்திய அளவில் உத்தரப்பிரதேசத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 76,778 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

தெலங்கானாவைச் ரோகன் புரோகித் 690 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் நீட் தேர்வு எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த 1,14,602 மாணவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றார். டெல்லியை சேர்ந்த ஹிமான்சு ஷர்மா 3வது இடம் பெற்றார்.

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% மட்டுமே தேர்ச்சி பெற்றார்.நீட் தேர்வு எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த 1,14,602 மாணவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா அகில இந்திய அளவில் 12வது இடத்தை பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 12வது இடம் பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump
Tamilnadu CM MK Stalin
US Election 2024 trump win