சென்னை, மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
சென்னை அரசுக் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 556 முதுநிலை மருத்துவ காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அண்மையில் நிரப்பியது. இதற்கான முதல்கட்ட கலந்தாய்வுகாக தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களே அழைக்கப்பட்டதாகவும், இதனால் விதிகளை மீறி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாகவும் அரசுக் கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தேர்வு வாரியத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அரசு மருத்துவமனைகளில் அரசுக் கல்லூரிகளில் பயில்பவர்களைக் கொண்டே முதுநிலை மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி 11ஆவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ-மாணவிகள், கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.