கோடை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
- கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிக்கல்விதுறை ஆசியர்களுக்கு அறிவுறுத்தல்.
பள்ளி செல்லும் மாணவமாணவிகளுக்கு ஏப்ரல் 13-ம் தேதியிலிருந்து, ஜூன்-3ம் தேதி வரை கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு சில உத்தரவுகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களுக்கு கோடை விடுமுறையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான அறிவுரை வழங்க வேண்டும் என்றும், வெப்பம் அதிகமாக இருப்பதால், பெற்றோர்களின் துணையின்றி வெளியில் செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளிகளில் கணினி வசதிகளை பயன்படுத்த ஏதுவாக தட்டச்சு வகுப்புகளுக்கு சென்று அடிப்படை பயிற்சியை பெற வேண்டும் என்றும், யோகா, அபாகஸ், இசை, ஓவியம், பரதநாட்டியம் உள்ளிட்ட தனித்திறன் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.