எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ்: 2 கட்ட கவுன்சிலிங்…!!
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கவுன்சிலிங் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ தேர்வு குழு செயலர் செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் 13ம் தேதி வரை நடைபெறும்.
கவுன்சிலிங் தொடர்பான விரிவான அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் வெளியிடப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்