மாவட்ட செயலாளர்கள் மாற்றம்.. திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு..!

சென்னை திமுக வடக்கு மாவட்ட செயலாளராக ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வீ.ஜெகதீசன் ஆகியோரை நியமித்து அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

READ MORE- ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வெகுமதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்” சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் த.இளையஅருணா அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு.ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ.,(82/பி முதல் பிரதான சாலை, திருவள்ளூவர் நகர், கொடுங்கையூர், சென்னை-118) அவர்கள் சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

அதேபோல பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் குன்னம் இராஜேந்திரன் அவர்கள், தனது உடல்நலக்குறைவு காரணமாக, தான் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதால், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற வீ. ஜெகதீசன் (நெய்குப்பை மெயின் ரோடு, வேப்பந்தட்டை & அஞ்சல், பெரம்பலூர் மாவட்டம்) அவர்கள் பெரம்பலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

READ MORE- பிரதமர் மோடி வருகை… மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை.!

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan

Leave a Comment