சென்னை உட்பட 4 மாவட்டங்களில் தொடர் மழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் தொடர் மழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!

Schools leave

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை பல்வேறு பகுதிகளில் தற்போது வரையில் நிற்காமல் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தாம்பரம், வேளச்சேரி, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது.

இன்று காலை வரை மழை தொடர்வதால், முதலில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடர்வதால் அங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Join our channel google news Youtube