வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு – பார் கவுன்சில் அறிவிப்பு

வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்துள்ளது. நீதிமன்றங்களுக்கு வழக்கு விசாரணைக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் எந்த ஒரு வழக்கறிஞரும் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பார் கவுன்சில் விதிப்படி, வழக்கறிஞர்கள் ஆடை விதிமுறையை பின்பற்றவில்லை என புகார் எழுந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு செல்லும் வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக பார் கவுன்சில்.