அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை…! மகிழ்ச்சியில் மக்கள்..!

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை.

சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது.

இந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,068.5க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment