அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை…! அதிருப்தியில் இல்லத்தரசிகள்..!

சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது.

எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைப்பது போல, மாதந்தோறும் சிலிண்டர் எரிவாயுவின் விலையையும் மாற்றுகின்றனர். பொதுவாக சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி சமையல் எரிவாயுவின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.850-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து, ஒன்றரை மாதத்திற்கு பின் தற்போது மீண்டும் சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது. மேலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு, இல்லத்தரசிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.