அஜித்திற்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தில் நடிப்பது யார் தெரியுமா..?

அஜித்திற்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தில் நடிப்பது யார் தெரியுமா..?

ajith kumar VidaaMuyarchi

நடிகர் அஜித்தின் 62-வது படமான “விடாமுயற்சி” இந்த மாத தொடக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தடம் படத்தை இயக்கியதன் மூலம் புகழ் பெற்ற மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்  மகிழ் திருமேனி  முதல் முறையாக இணைந்துள்ள படம் இது தான்.

VidaaMuyarchi
VidaaMuyarchi [Image source : twitter/ @LycaProductions ]

இந்த விடாமுயற்சி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில், இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளாராம்.

VidaaMuyarchi update
VidaaMuyarchi update [Image source : @CinemaWithAB ]

மகிழ் திருமேனியுடன் இணைந்து 2014ம் ஆண்டு மைக்மான் படத்தில் பணியாற்றிய த்ரிஷா 10 ஆண்டுகளுக்கு  பிறகு மீண்டும் இயக்குனருடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. என்னை அறிந்தால் (2015), மங்காத்தா (2011), கிரீடம் (2007) மற்றும் ஜி (2005) ஆகிய படங்களுக்குப் பிறகு அஜித் மற்றும் த்ரிஷா மீண்டும் இணையவுள்ளார்கள்.

Trisha
Trisha [Image source : twitter/ @LetsOTTOff ]

விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் 2-வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய சலசலப்புகளின்படி, படம் 2024 கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube