இரும்புத்திரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் பஹத் பாசில் என்று தகவல் கசிந்துள்ளது. 

இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தில் சமந்தா, அர்ஜுன், டெல்லி கணேஷ், விவேக் பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிர்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அதாவது இந்த படத்தில் அர்ஜுன் நடித்த வைட் டெவில் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது, நடிகர் பஹத் பாசில் தானாம். சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.